Headlines News :
Home » » Delete செய்ய முடியாத Files & Folder-களை Delete செய்வது எப்படி?

Delete செய்ய முடியாத Files & Folder-களை Delete செய்வது எப்படி?

Written By Web Developer on Saturday, May 26, 2012 | 2:16 PM










சில சமயங்களில் கணினியில் குறிப்பிட்ட Folder/File போன்றவற்றை டெலீட் செய்யும் போது Access Denied என்று வரும். என்ன தான் பிரச்சினை என்று நமக்கு தெரியாது.
ஆனால் டெலீட் செய்யவும் இயலாது.அதன் காரணத்தையும் அவற்றை உடனடியாக டெலீட் செய்ய என்ன வழி என்று பார்ப்போம்.
இதற்கு காரணம் உங்கள் Folder/ File கணினியில் இயங்கி கொண்டிருப்பதே ஆகும். நாம் அவற்றை க்ளோஸ் செய்து இருந்த போதிலும், இந்த பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. பின்னணியில் அவை இயங்குவது காரணமாய் இருக்கலாம்

படத்தில் உள்ளது போலத் தான் பெரும்பாலும் வரும். இது மாதிரி வரும் போது அவற்றை எப்படி டெலீட் செய்வது?
இதற்கு உதவும் மென்பொருள் தான் “Unlocker”. இது டெலீட் மட்டும் இன்றி இன்னும் Rename, Move போன்ற வசதிகளை செய்யும்.
இதன் மூலம் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும் File/Folder – இன் இயக்கத்தை நிறுத்தி அவற்றை Delete செய்ய இயலும்.
இங்கே சென்று Unlocker மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.Unlocker_download
இதை இப்போது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
எதை Delete செய்ய முடியவில்லையோ, அந்த File/Folder மீது Right Click செய்து “Unlocker” என்பதை கிளிக் செய்யவும்.


இப்போது மேலே உள்ளது போல வரும் புதிய விண்டோ ஒன்றில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும், அதில் “Kill Process” என்று கொடுத்தால் இயங்கி கொண்டிருக்கும் அதன் செயல் நின்று விடும், இதன் மூலம் நீங்கள் Delete செய்து விட முடியும். இல்லை என்றால் “Unlock All” என்பதை தெரிவு செய்து கூட பின்னர் Delete செய்ய முடியும்.
இதே, அந்த File/Folder எங்கேயும் இயங்கவில்லை என்றால் கீழே உள்ளது போல ஒரு சின்ன விண்டோ வரும், அதில் Delete என்பதை தெரிவு செய்தால் போதும்.
 இப்போது சில வினாடிகளில் அந்த File/Folder Delete ஆகி விடும். பிரச்சினை முடிந்தது.
Share this article :
Extension Factory Builder
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Newtricksnews - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template