Headlines News :
Home » , » பெரிய பைல்களை சிறு சிறு பைல்களாக்கி திரும்பவும் ஒரே பைலாக மாற்ற

பெரிய பைல்களை சிறு சிறு பைல்களாக்கி திரும்பவும் ஒரே பைலாக மாற்ற

Written By Web Developer on Friday, May 4, 2012 | 7:12 AM


நம்முடைய கணினியில் பெரிய பைல்களை சேமித்து வைத்து இருப்போம். இந்த பைல்களை மெயில் அனுப்பவும் நம் கணினியில் கையாளவும் மிகவும் சிரமமாக இருக்கும். இந்த பெரிய பைல்களை எப்படி சிறு சிறு பைல்களாக பிரித்து மீண்டும் ஒட்ட அஒரு இலவச மென்பொருள் பயன் படுகிறது.


இந்த மென்பொருளை கீழே உள்ள டௌன்லோட் பட்டனை அழுத்தி பெற்று உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை

Exe பைலை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்


முதலில் உள்ள கட்டத்தில் உங்களின் பெரிய பைலை தேர்வு செய்து கொள்ளவும்
அடுத்து இரண்டாவது கட்டத்தில் உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்
Split into என்ற கட்டத்தில் உங்களுடைய பைல் எத்தனை பகுதிகளாக வேண்டும் என்று குறிப்பிடவும்
அடுத்து கீழே உள்ள Split என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பெரிய பைல் அடுத்த வினாடியே சிறு சிறு பைல்களாக நீங்கள் கொடுத்த எண்ணிக்கையில் வரும்
இப்பொழுது இந்த பைல்களை நீங்கள் மெயிலில் சுலபமாக அனுப்பிவிடலாம்
திரும்பவும் இந்த பைல்களை ஒரே பைலாக ஆக்க நினைத்தால் மறுபடியும் இந்த மென்பொருளை திறந்து JOINING என்பதை க்ளிக் செய்தால் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் பிரித்த பைலை தேர்வு செய்து JOIN என கொடுத்தால் அந்த பைல் திரும்பவும் ஒரே பைலாக மாறி விடும்







Share this article :
Extension Factory Builder
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Newtricksnews - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template