Headlines News :
Home » , » கிரிக்கெட் ஸ்கோர்களை இலவசமாக குறுந்தகவல

கிரிக்கெட் ஸ்கோர்களை இலவசமாக குறுந்தகவல

Written By Web Developer on Tuesday, May 1, 2012 | 4:54 PM

புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் ஜிப்டயல் நிறுவனம் கிரிக்கெட் ஸ்கோர்களை மக்களிடம் சென்று சேர்ப்பதில் புதுமையை புகுத்தியுள்ளது. கிரிக்கெட் ஸ்கோர்களை கேட்க மற்றும் தகவலாக பெற இன்று பல்வேறு நிறுவனங்கள் குறைந்தது முப்பது ரூபாய் முதல் நூறு ருபாய் வரை வசூலிக்கிறது. அனால் ஜிப்டயல் நிறுவனம் தனது சேவையை இலவசமாக அளிக்கிறது . ஜிப்டயல் கிரிக்கெட் ஸ்கோர்களை இலவசமாக குறுந்தகவல் மூலம் அளிக்கிறது.

உயிரூட்டுவதர்கான வழிமுறைகள்:

உங்களது அலைபேசியில் இருந்து 080 300 500 55 என்ற கட்டணம் இல்லாத இலவச எண்ணை அழைக்கவும். அழைப்பு ஒரு ஒலிக்கு பின் தானாக துண்டிக்கப் பட்டுவிடும். அவ்வளவுதான் உங்களது எண்ணுக்கு இந்த சேவை உயிரூட்டப்பட்டுவிடும். அதற்கான உறுதிபடுத்தப்பட்ட குறுந்தகவல் உங்கள் அலைபேசிக்கு வந்து சேரும்.

ஸ்கோர்களை உடனுக்கும் பெற்றுக்கொள்ளும் வழிமுறை:

கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் போது உங்களுக்கு எப்போது ஸ்கோரினை அறிந்து கொள்ள விருப்பமோ அப்போது மேல் குறிப்பிட்டுள்ள எண்ணை அழைக்கவும். ஒரு ஒலிப்புக்கு பின் அழைப்பு துண்டிக்கப்படுவிடும் பின் உடனடியாக ஸ்கோர் குறுந்தகவல் வாயிலாக வந்து சேரும். இந்த சேவை முற்றிலும் இலவசம்.......
Share this article :
Extension Factory Builder
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Newtricksnews - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template