ஆனால் சில நிபந்தனைகள் உள்ளன என்று அவற்றை பின்பு வெளிப்படுத்துவார் என்றும் கூறி இருக்கின்றார். எது எப்படி இருந்தாலும் முக்கியமாக திருமண வாழ்க்கையை இரசிப்பவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்.
சவூதி அரேபிய சஞ்சிகைகளில் ஒன்று Roa. இதில்தான் மிகவும் கவர்ச்சிகரமான வகையில் விளம்பரம் பிரசுரமாகி உள்ளது. ஆர்வலர்கள் பக்ஸ் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து இருக்கின்றார். ஆயினும் சொந்த பெயர், வதிவிட முகவரி, வயது போன்றவற்றை வெளிப்படுத்தி இருக்கவில்லை.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கத்தை விண்ணப்பதாரிகள்தான் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்றும் பொருத்தமானவர் என்று கருதுகின்ற பட்சத்தில் விண்ணப்பதாரியுடன் தொடர்பு கொள்வார் என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
ஆண் பணத்தின் மீது பேராசை கொண்டவராக இருந்தாலும் பரவாயில்லை, திருமண வாழ்க்கையை இரசிக்க வேண்டும், கடமைகளை இரசிக்க வேண்டும், மிஸ்யார் திருமணம் என்றால்கூட பரவாயில்லை, 5 மில்லியன் சவூதி ரியாலை ஒரு முறை வழங்க தயார், வீட்டுக்கு வந்து ஒன்றாக வசிக்க வேண்டும், இனி மேல் வெளிப்படுத்த இருக்கின்ற நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் …..என்கிறது இவ்விளம்பரம்.
இப்பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் கணவன் பணத்தின் மீது மாத்திரம் ஆசை காட்டி வந்திருக்கின்றார் என்பதால் விவாகரத்து பெற்று விட்டார் என்றும் இரண்டாவது கணவனை தெரிகின்ற முயற்சியில் முன் போல ஏமாந்து விட கூடாது என்பதாலேயே இவ்விளம்பரத்தை பிரசுரித்து இருக்கின்றார் என்றும் தெரிகின்றது.
மிஸ்யார் என்பது ஒரு வகை ஒப்பந்தத் திருமணம். வேறு வேறு இடங்களில் பிரிந்து வாழலாம், ஆனால் செக்ஸ் உறவுக்காக கிரமமாக சந்திக்க வேண்டும். இத்திருமண முறை இஸ்லாமில் உள்ளது. சவூதி அரேபியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான்.
ஆனால் பிரபலம் ஆனது அல்ல. ஏனெனில் இது சட்டபூர்வ விபச்சாரமாகவே ஏராளமானோரால் கருதப்படுகின்றது. கிட்டத்தட்ட எல்லா விதமான உரிமைகளையும் மிஸ்யார் திருமணம் மூலம் பெண்கள் இழந்து விடுகின்றனர். 80 சதவீதமான மிஸ்யார் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.

